(வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்திற்குச் சொந்தமான களுவாஞ்சிக்குடிக் காணியில் தமிழ்ச்சங்க பெயர்ப்பலகை தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் வரலாறும் தமிழ்ச்சங்கத்திற்கு சொந்தமான காணி பற்றிய வரலாற்றுத்தகவல்களும் மிகவும் தெளிவான வகையில் சபையோருக்கு தலைவரினால் எடுத்துரைக்கப்பட்டது.
அதேவேளை,
அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் ஜனன சிரார்த்த தின ஞாபகார்த்தக் கட்டுரை மற்றும் கவிதைப் போட்டியில் பங்குபற்றி பரிசுபெற்ற மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கலாபூசணம் கா.சிவலிங்கம் அவர்களை மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தால் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் சட்டத்தரணி மு.கணேசராசா உரையாற்றியதைத்தொடர்ந்து சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் சார்ந்த கருத்துக்கள் தமிழ்ச்சங்கத்திற்கு சொந்தமான களுவாஞ்சிக்குடி காணியை பராமரித்தல், வினைத்திறன் கொண்ட செயற்பாட்டிற்கு அதனை எவ்வாறு பயன்படுத்தல் என்பன தொடர்பான கருத்துக்கள் செயற்குழு உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன.
அவ்வகையில் குறித்த காணியில் தமிழ்ச்சங்கச்செயற்பாட்டின் இயங்குநிலைக்காக சபையோரால் குழு ஒன்று தெரிவுசெய்யப்பட்டு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன.
Post a Comment
Post a Comment