.சுகிர்தகுமார் 0777113659
விபத்துக்குள்ளான கார் சேதமடைந்துள்ளபோதும் தெய்வாதீனமாக வாகனத்தை செலுத்தியவர் காயங்கள் எதுவுமின்றி மீட்க்கப்பட்டார்.
உகந்தை பகுதியிலிருந்து வருகை தந்த கார் அக்கரைப்பற்று பிரதேசத்தை நோக்கி பயணித்திருந்த வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வளைவில் வீதியை விட்டு விலகிய கார் பாதையின் ஓரத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த சிறிய தூணை உடைத்துக்கொண்டு பாய்ந்து விபத்துக்குள்ளானதாக அறிய முடிகின்றது.
வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் இதேநேரம் விபத்து தொடர்பான விசாரணையினை திருக்கோவில் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
Post a Comment
Post a Comment