(வி.ரி. சகாதேவராஜா)
தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தேசிய சாதனை புரிந்த மல்வத்தை விபுலானந்தா மாணவி சிவரூபன் ஜினோதிகாவை காரைதீவு முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் வீடு தேடிச் சென்று ஐம்பதாயிரம் ரூபாய் பரிசை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நேற்று முன்தினம்இந்நிகழ்வு மல்வத்தையில் இடம்பெற்றது.
கனடாவில் வாழும் பரோபகாரி அசோகன் அவர்கள் உபயமளித்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பொன்னாடை போர்த்தி அங்கு அன்பளிப்பு செய்தார்.
அத் தருணம் பாடசாலை அதிபர் திருமதி கௌசல்யா ஞானேஸ்வரன் உதவி கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா உள்ளிட்ட ஆசிரியர்கள் அங்கு கலந்து சிறப்பித்தனர்.
பெற்றோரும் கலந்து கொண்டனர் .
இதன் போது மாணவி ஜினோதிகா கருத்துரைக்கையில்.. எனக்கு முதல் தடவை இப்படி ஒரு பாரியதொரு தொகையை அன்பளிப்பு செய்த கனடா அசோகன் மாமாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எனது தொடர் கல்விக்கு அவரும் ஏனையோரும் உதவுவார்கள் என எதிர்பார்க்கிறேன். நன்றிகள் என்றார்.
Post a Comment
Post a Comment