+
(வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் விவசாயம் மற்றும் தொழில்துறை பிரிவின் தலைவரும் இலங்கை தொழினுட்ப கல்வி சேவை உத்தியோகத்தருமான சாமித்தம்பி ரவீந்திரனுக்கு நேற்று (31) சேவை நலன்பாராட்டு விழா இடம்பெற்றது ..
காரைதீவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரான சாமித்தம்பி ரவீந்திரன் தனது 18 வருட சேவையின் பின்பு 60 வது வயதில் நேற்று ஓய்வு பெற்றார் .
அதனையொட்டி தொழில்நுட்ப கல்லூரி அதிபர் சதாசிவம் தியாகராஜா தலைமையில் சேவை நலன் பாராட்டு விழா தொழில்நுட்ப கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது.
ரவீந்திரன் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
அங்கு அதிபர் விரிவுரையாளர்கள் எனப் பலரும் பாராட்டி பேசியதுடன் அவருக்கு வாழ்த்து மடல் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.
Post a Comment