வி.சுகிர்தகுமார் 0777113659
38 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் தடுப்புக்காவலில் 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா இன்று (21)உத்தரவிட்டார்.
திருக்கோவில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாசக்தி கிராமத்தின் வீதியில் வைத்து; திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் நேற்று (20)மேற்கொண்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது அதிக நிறையுடைய போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அதிக நிறையுடன் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி குறித்த நபரை அம்பாரை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் அனுமதிக்கமைய அக்கரைப்பற்று பொலிசார் நீதிமன்றில் ஆஜர்படுத்தி பொலிஸ் தடுப்புக்காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரியபோதே நீதவான் இவ்வாறு அனுமதி வழங்கினார்.
தடுத்து வைக்கப்பட்ட நபரை 72 மணித்தியாலங்களின் பின்னர் நீதிமன்றில் மீண்டும் முற்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அக்கரைப்பற்று பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
அதிகளவான நிறையுடன் ஜஸ் போதைப்பொருள் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்பதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
5 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்படுமிடத்து அவருக்கு மரண தண்டனை வழங்க முடியும் என சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில் 38 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் இன்று ஒருவர் நபர் கைது செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment
Post a Comment