(வி.ரி.சகாதேவராஜா)
அக்கரைப்பற்று யங் பிளவர் ரி20 சாம்பியன்ஸ் ட்ரொபி சுற்றுப் போட்டியின் ஏழாவது போட்டி கடந்த சனிக்கிழமை அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
காரைதீவு விளையாட்டு கழகத்திற்கும், விவேகானந்த விளையாட்டு கழகத்திற்கும் இடையே இடம் பெற்ற இந்த போட்டியில் 25 ஓட்டங்களால் காரைதீவு விளையாட்டு கழக அணி வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கே.எஸ். சி அணியினர் 137 ஓட்டங்களை பெற்றிருந்தார்கள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பி.எஸ்.சி அணியினர் 106 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.
அதன்படி கே எஸ் சி அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றது..
இந்த போட்டியில் சிறப்பாட்டக்காரர் விருதை கேஎஸ்சி அணியைச் சேர்ந்த பி.சுலக்ஷன் பெற்றுக் கொண்டார்.
அவர் 28 ஓட்டங்களையும் இரண்டு விக்கெட் களையும் கைப்பற்றி சிறப்பாட்டக் காரராக தேர்வு செய்யப்பட்டார்.
இவருக்கு 15,000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
Post a Comment
Post a Comment