( வி.ரி. சகாதேவராஜா)
மனித அபிவிருத்தி தாபனத்தால் அம்பாறை மாவட்டத்தில் சகவாழ்வு சங்கங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயற்றிட்டத்தின் ஒரு செயற்பாடாக சகவாழ்வு சங்க உறுப்பினர்களுக்கான பால்நிலை சமத்துவம் தொடர்பான செயலமர்வு மனித அபிவிருத்தி தபான உதவி இணைப்பாளர் எம். ஐ. றியால் தலைமையில் நடைபெற்றது.
இச் செயலமர்வுக்கு வளவாளராக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனித்தா மோகன் கலந்து கொண்டு விளக்கவுரை வழங்கினார்.
இக் கருத்தரங்கானது காரைதீவு, கல்முனை பிரதேசங்களில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இச் செயலமர்வுக்கு காரைதீவு, கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சகவாழ்வு சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்
Post a Comment
Post a Comment