நூருல் ஹுதா உமர்
மிக விரைவில் மூன்றாம் தொகுதி மாணவர்களுக்கான மனித உரிமைகள் குறுங்கால பாடநெறிக்கான சான்றிதழ் மற்றும் டிப்ளோமா கற்கை நெறிகள் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் தெரிவித்தார்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மனித உரிமைகள் கற்கைநெறி மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையினால் நடாத்தப்பட்ட மனித உரிமைகள் குறுங்கால சான்றிதழ் பாடநெறி க்கான இரண்டாம் தொகுதி மாணவர்களின் இறுதிப் பரீட்சையும் பிரியாவிடை நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (02) தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மனித உரிமைகள் கற்கை நெறியின் மாணவன் முஸ்தபா முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக வும், விசேட அதிதிகளாக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி. எம்.எம். பாஸில் , பாடநெறியின் இணைப்பாளர் விரிவுரையாளர் ரி.எப். சஜீதா, உதவி விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள் என பலரும் கலந்து கொண்டதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட பல்கலைக்கழக உபவேந்தர், பீடாதிபதி, விரிவுரையாளர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நினைவு சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment
Post a Comment