அதிரடி நடவடிக்கை




 


வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிராமத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பை தடுக்க திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமினால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 மாளிகைக்காட்டில் ஏற்பட்ட கடலரிப்பின் காரணமாக கடற்கரை மிக வேகமாக பாதிக்கப்பட்டு அண்மித்த கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

 இதுவிடயமாக மீனவர் அமைப்புக்கள் மற்றும் மாளிகைக்காடு கிழக்கு வட்டார முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.எச் நாஸர் ஆகியோர் திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் குறித்த இடத்திற்கு விஜயம் செய்தார்.

பைசால் காசீமின் வேண்டுதலுக்கிணங்க  முதற் கட்ட தற்காலிக ஏற்பாடாக லியோ பேக்கில் மண் நிரப்பி கரையோரத்தை அரிப்பில்லிருந்து பாதுகாப்பதற்கும் பின்னர் நிரந்தத் தீர்வொன்றை துரித கதியில் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த வேலை நாளை  வியாழக்கிழமை (04.07.2023) ஆரம்பிக்கப்படும் என கரையோரப் பாதுகாப்பு தினைக்களப் பொறியியலாளர் எம். துளசிதாஸன் இங்கு குறிப்பிட்டார்.