வி.சுகிர்தகுமார் 0777113659
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பனங்காட்டு பாலத்திற்கு அன்மையில் உள்ள களப்பில் மிதந்த நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்க்கப்பட்டது.
சடலமாக மீட்க்கப்பட்டவர் அக்கரைப்பற்று கோளாவில் -02 பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய இரு பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணி தாயின் கணவரான இராமலிங்கம் சிவகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
களப்பில் உள்ள ஆழமான பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே களப்பின் சேற்றில் புதைந்து இவர் இறந்திருக்கலாம் என உறவினர்களால் சந்தேகிக்கப்படுகின்றது.
மேசன் தொழில் ஈடுபடும் இவர் மீன்பிடிக்கும் தொழிலை முறையாக கற்றுக்கொள்ளவில்லை எனவும் அவ்வப்போது மீன் பிடிக்க செல்வது வழமை என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.
அவ்வாறான அவர் நேற்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்ததன் பின்னர் களப்பில் மீன்பிடித்து வருவதாக கூறி சென்றுள்ளார்.
மாலை வரை அவர் வீட்டிற்கு திரும்பாத நிலையில் அவரின் மனைவி உறவினர்களிடம் விசாரித்துள்ளார். அங்கும் அவர் செல்லவில்லை என தெரிந்து கொண்ட நிலையில் இன்று காலை களப்பில் சடலமொன்று மிதப்பதாக அறிந்து கொண்டு பார்வையிட்டபோதே இறந்தவர் தனது கணவர் என அடையாளம் காணப்பட்டார்.
இறந்தவரின் ஒரு கையில் அவர் கொண்டு சென்ற சிறிய பை காணப்படுவதுடன் அருகில் அவரது மோட்டார் சைக்கிளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.
பனங்காட்டு களப்பில் சேற்று பகுதியுடன் ஆழமான சில ஆபத்தான பிரதேசங்களும் உள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
இதேநேரம் குறித்த இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment
Post a Comment