நாடு கடந்த ஆட்சியில் அதலபாதாளத்துக்கு சென்று கொண்டிருந்த பொழுது அந்த நாட்டை மீட்டு பாரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது ஊடகங்களே. ஒரு நாட்டின் முதுகெலும்பு ஊடகம் என்றால் அது மிகைஅல்ல.
இவ்வாறு அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், காரைதீவில் வெற்றி நியூஸ் ஊடக மையத்தை திறந்து வைத்து பேசியபோது குறிப்பிட்டார்.
காரைதீவு வெற்றி நியூஸ் ஊடக மையத்திறப்பு விழா நேற்று முன்தினம்(17) ஞாயிற்றுக்கிழமை சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக, கிழக்கிலங்கையின் புகழ்பெற்ற சிவாச்சாரியார் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் சமய வழிபாடு கிரியைகளை மேற்கொண்டு,, ஆசியுரை நிகழ்த்தி அதனை ஆரம்பித்து வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் நாடாவெட்டி புதிய ஊடக மையத்தை திறந்து வைத்தார்.
அங்கு கோடீஸ்வரன் மேலும் பேசுகையில்..
நாட்டிலே முன்னர் கோர ஆட்சி இடம் பெற்றது .ஏழு லட்சம் பேர் வேலை இழந்தார்கள். பிழையான கொள்கை, அத்தியாவசிய சேவை மற்றும் விவசாயத்திலே கை வைத்தார்கள். ஊழல்கள், மோசடிகள் மலிந்தன. நாடு பின் தள்ளப்பட்டது. இவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது ஊடகமே.
இன்று அத்தகைய ஊடகங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர எத்தனிக்கிறார்கள். அப்படியானால் ஊடகங்களின் குரல்வளை நசுக்கப்படும். எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் அதனை முற்றாக எதிர்க்கின்றோம்.
ஞானேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
வெற்றி நியூஸ் இணையதளத்தைச் சேர்ந்த சங்கீத், சனுசன், தசானந்த் ஆகியோர் நோக்கம் பற்றி பேசினர்.
நிகழ்வில் காரைதீவு பிரதேசசபை செயலாளர் ஏ. சுந்தரகுமார், இளங்கவிஞர் விபுலசசி உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தார்கள்.
Post a Comment
Post a Comment