அம்பாரை மாவட்ட விவசாயிகள் கவலை




 


நெல்லுக்கு போதுமான விலை போகவில்லை ; விவசாயிகள் கவலை தெரிவிப்பு.


(எஸ். சினீஸ் கான்)


தற்போது அக்கரைப்பற்று பிரதேசத்தில் 2023/2024  சிறு போக நெல் அறுவடை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் கடந்த வருடத்தை விடவும் இம் முறை விளைச்சலின் அளவு பாரிய அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றர்.


மேலும், தாம் நகைகளைகளை அடகு வைத்து, கடன்பட்டு கிருமிநாசினிகள் மற்றும் விவசாய பொருட்களை கொள்ளவவு செய்ததாகவும் நெல்லுக்கு போதுமான விலை போகதாத காரணத்தில் பல்வேறு சவால்களை எதிரநோக்க வேண்டியிருப்தாக கவலை தெரிவிக்கின்றனர்.


அரசாங்கம் நெல்லுக்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், அரசாங்கம் நெல்லைக்கொள்வனவு செய்ய வேண்டும் கோரிக்கை விடுக்கின்றனர்.