ஹரீஸ் மற்றும் இஸாக் எம்.பிக்களின் முயற்சியால் முஸ்லிம் அமைப்புக்களின் தடை நீங்கியது.
நூருல் ஹுதா உமர்
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜங்க அமைச்சருமான சட்டதரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸாக் ரஹ்மான் ஆகியோரின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினருடானான தொடர் முயற்சியின் பயனாக தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்கள் தடை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகள் மீது போடப்பட்ட தடை அரசினால் உத்தியோகபூர்வமாக இன்று (27.07.2023ம் திகதி) வர்த்தமானி எண் 2223/3மூலம் நீக்கப்பட்டு விட்டதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
2223/3 வர்த்தமானியின் உப அட்டவணையில் குறிப்பிடப்படப்பட்டிருந்த
ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத், ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத், அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத் அன்ஸாரி சுன்னதில் முஹம்மதிய்யா ஆகிய அமைப்புகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.
குறித்த தடை நீக்க விடயத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸாக் ரஹ்மான் ஆகியோர் அரச முக்கியஸ்தர்கள், பலதரப்பட்ட பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகளுடன் பல்வேறு முயற்சிகளினதும், பேச்சுவார்த்தைகளின் பயனாக இத்தடை நீக்கம் மேற்கொள்ளப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாக பல்வேறு முஸ்லிம் அமைப்புங்களும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Post a Comment
Post a Comment