உள்ளூர் கலப்பின சோளம் விதைகள் அறிமுகம்




 (வி.ரி.சகாதேவராஜா)



மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தினால் வழங்கி வைக்கப்பட்ட உள்ளூர் கலப்பின சோளம் விதைகள் அறிமுகம் செய்யப்பட்டு, புதிய நடுகை முறையில் மண்டூர் விவசாய போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட தம்பலவத்தை கிராமத்தில் நடுகை செய்யப்பட்டது. 

அதன் வெற்றிகரமான அறுவடை விழா நேற்று தொழில்நுட்ப உத்தியோகத்தர் குலசிங்கம் கிலசனின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா  கௌரவ அதிதிகளாக வலயம் தெற்கு உதவி விவசாய பணிப்பாளர் எஸ். சித்திரவேல் மண்டூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயகாந்தன் மேலும் பாடவிதான உத்தியோகத்தர் லக்ஸ்மன் விவசாய போதனாசிரியர் கோபி மற்றும் விவசாயிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். 

கலப்பின சோளம் விதைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நடுகை செய்யப்பட்டுவரும் நிலையில், உள்ளூர் கலப்பின சோளம் விதைகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த உள்ளூர் கலப்பின சோளம் விதைகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.

 அதனை படைப்புழு தாக்கத்தையும் எதிர்கொள்ளும் வகையில் புதிய நடுகைமுறையில் விவசாய திணைக்களத்தால் வழங்கப்பட்ட விவசாய கிணற்றில் கீழ் செய்கை பண்ணப்பட்டு தயாபரன் எனும் விவசாயி விவசாய திணைக்களத்தால் வழங்கப்பட்ட புதிய தொழில்நுட்ப முறைகளை சரியான முறையில் பின்பற்றி வெற்றிகரமான அறுவடையை பெற்றுள்ளார்.