ஒரு சமுதாயத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மாபெரும் சொத்து பெண்களே'





 (வி.ரி. சகாதேவராஜா)


 ஒரு சமுதாயத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மாபெரும் சொத்து பெண்களே. அவர்களது உரிமைகள் சுதந்திரங்கள் அவர்கள் கையில் இருக்கின்றன. மாறாக ஆண்கள் கையில் அல்ல.

 இவ்வாறு கல்முனையில் சமூக செயற்பாட்டு சான்றிதழ் கற்கைநெறியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தெரிவித்தார்.

 அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு ஏற்பாடு செய்த மூன்று மாத கால சமூகசெயற்பாடு சான்றிதழ் கற்கைநெறியின் அங்குரார்ப்பண வைபவம்  நேற்று முன்தினம்(22) சனிக்கிழமை பெண்கள் வலையமைப்பின் தலைவி திருமதி தியாகேஸ்வரி ரூபன் தலைமையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

 அங்கு மேலதிக அரச அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் மேலும் பேசுகையில்..

 இங்கு வழங்கப்படும் பயிற்சி  உங்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமையட்டும் .இதற்கு பெறுமதியே இல்லை. கல்விக்கு உரிய பெறுமதியை யாரும் அளித்துவிட முடியாது. இதனை முறையாக பயன்படுத்துங்கள். என்றார்.

நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏசிஏ. அசீஸ் சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்  வி.ரி.சகாதேவராஜா  அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஐஎல்எம்.இர்பான்  வலையமைப்பின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி.திருமதி அருந்தவராஜா துளாஞ்சனி ,  பொதுச்சபைத்தலைவி திருமதி கலைவாணி தயாபரன்,  வலையமைப்பின் செயலாளர் திருமதி ஜெனிதா மோகன் வலையமைப்பின் பொருளாளர் திருமதி டெலினா றொசய்ரோ  மற்றும்  அமைப்பின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வலையமைப்பின் செயற்பாட்டு இடம் பெறும் மாவட்டத்தின் ஆறு பிரதேசங்களில் இருந்து நாற்பது யுவதிகள் இப் பயிற்சி நெறிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.