வீடுகளுக்கு அடிக்கல்




 


பாறுக் ஷிஹான்


சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் செளபாக்கியா வீடமைப்பு திட்டத்தின் கீழ் கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட  வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு  இன்று  (12.07.2023)  புதன்கிழமை  மருதமுனை-04 ம் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 கல்முனை சமுர்த்தி வங்கிச் சங்க சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் அதன் முகாத்துவப் பணிப்பாளர் என்.எம் நௌசாத்  நெறிப்படுத்தலில் சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலிஹ்  தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி அவர்கள் கலந்து கொண்டார்.

இதில் அதிதிகளாக சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.எஸ்.பரீறா ,வலயஉதவி முகாமையாளர் பி.எம் இஸ்ஹாக் , பிரிவுக்கு பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர் முகர்ரமா ,என பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவில்  ரூபா 7 லட்சத்தி 50 ஆயிரம்  பெறுமதியான 03 வீடுகளும் ரூபா 2 லட்சத்தி 50 ஆயிரம் பெறுமதியான 03 வீடுகளுக்குமான ஆரம்ப கட்ட நிதிகள் கிடைக்கப் பெற்றுள்ளது.