கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !




 




திருகோணமலை மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !

நூருல் ஹுதா உமர் 


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா விபுலாநந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 56 பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் திருகோணமலை பாரதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 50 மாணவர்களுக்கும் இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல்  உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை  என்பன  பாடசாலையின் அதிபர்களான செ. சத்தியசீலன் மற்றும் திருமதி சுஜந்தினி யுவராஜா ஆகியோர் தலைமையில் 

வழங்கி வைக்கப்பட்டது. 


திருகோணமலை மாவட்ட கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் மிகவும் அதிகஸ்ட, தொழில் வாய்ப்பற்று வாழும் குடும்ப மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் இந்த கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது.


இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான சி.காந்தன், மா. ஜெயநாதன், சிருஸ்காந் சதீஸ்குமார், ஆகியோர் கலந்து கொண்டு இரு பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியைகளான திருமதி. க. சத்தியசீலன், திருமதி. அ. பிரதீபா, க. சிறிதரன், அ. அலெக்ஸ்சாண்டர், அ. ரவிகுமார் மேலும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுசங்க செயலாளர் அ. சங்கீத்தன் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் வருகை தந்திருந்தனர்.


இணைந்த கரங்கள் அமைப்பு கல்விற்கான சேவையினை ஆரம்பித்து ஒரு வருட காலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பாடசாலைகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை  என்பன வழங்கி அவர்களின் கல்விச் செயற்பாட்டினை  முன்னெடுக்க உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.