நினைவு உரை




 


நூருல் ஹுதா உமர்

"ஷைகுல் பலாஹ்" மர்ஹூம் அப்துல்லாஹ் ரஹ்மானியின் 7வது வருட ஞாபகார்த்த நிகழ்வும் மர்ஹூம் மௌலவி ஆதம்லெவ்வை ஹஸரத் பற்றியும் நினைவு உரை நிகழ்வும் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம்  மற்றும் ஜமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரி நிருவாக சபை ஆகியவற்றின்  ஏற்பாட்டில் பழைய மாணவர் சங்க தலைவர்  மௌலவி அப்துல் அஸீஸ் (பலாஹி) தலைமையில் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் ஷைகுல் பலாஹ் மர்ஹூம் அப்துல்லாஹ் ரஹ்மானி  ஹஸரத் பற்றிய நினைவுரையை அஷ்-ஷெய்ஹ் ஜலீல் மதனியும் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மர்ஹூம் ஆதம்லெவ்வை ஹஸ்ரத் பற்றிய நினைவுரையை கல்லூரியின் இயக்குனர் சபை செயலாளர் மெளலவி எம்.எச்.எம் புகாரி (பலாஹி) ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், கல்லூரியின் அதிபர் எம்.ஏ.எம்.ரஹ்மத்துல்லாஹ் (பலாஹி) பிரதி அதிபர் எஸ்.எம். அலியார் (பலாஹி) உட்பட விரிவுரையாளர்கள், நிருவாகிகள், பழைய மாணவர்கள், உலமாக்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.