.(சுகிர்தகுமார் 0777113659
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் 76வது மகாசமாதி தினத்தை முன்னிட்டதான குருபூஜை நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று (19) மாலை நடைபெற்றது.
இந்து மாமன்ற தலைவர் வே.சந்திரசேகரம் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற கட்டடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ப.கேதீஸ்வரக்குருக்கள் மான்றத்தின் செயலாளர் தேசமான்ய ஸ்ரீ மணிவண்ணன், பொருளாளர் அ.தர்மதாசா உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் அறநெறி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சிவஸ்ரீ ப.கேதீஸ்வரக்குருக்களின் விசேட பூசை ஆராதனை மற்றும் ஆசியுரையுடன் ஆரம்பமான நிகழ்வில் பிரதேச இந்து மான்ற செயலாளர் தேசமான்ய ஸ்ரீ ரீ.மணிவண்ணன் வரவேற்புரை நிகழ்த்தியதுடன் சுவாமி விபுலாநந்தரின் மகாசமாதி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட குருபூஜை நினைவு தின நிகழ்வு தொடர்பாகவும் கூறினார்.
தொடர்ந்து சுவாமி விபுலாநந்தர் தமிழிற்கும் சைவத்திற்கும் ஆற்றிய அரும்பணிகள் மற்றும் பெருமைகள் பற்றி ஆலையடிவேம்பு பிரதேச இந்து மான்ற தலைவர் திரு.வே.சந்திரசேகரம் விளக்கினார்.
இதேநேரம் சுவாமி விபுலாநந்தரின் வரலாறு தொடர்பாக பல விடயங்கள் பேசப்பட்டதுடன் பொன் லோகநாதன் உரையாற்றுகையில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 11ஆம் ஆண்டு சைவசமய புத்தகத்தில் விபுலாநந்தரின் பிறந்த வருடம் 1873 எனவும் 7ஆம் ஆண்டு சைவசமய புத்தகத்தில் 1892 எனவும் வெளியிடப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. ஆயினும் 07 ஆம் ஆண்டு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 1892 என்பதே சரியானது. ஆகவே இதனை திருத்தியமைக்க சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மான்ற உறுப்பினர்களான ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் வி.குணாளன் மற்றும் க.கிருஸ்ணமூர்த்தி ஆகியோரும் சுவாமி விபுலாநந்தர் சிறப்புகள் தொடர்பான உரைகள் மற்றும் கவிதைகள் வழங்கினர்.

Post a Comment
Post a Comment