(வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்திலுள்ள மல்வத்தை கிராமத்தில் புதிதாக மதுபான சாலை
திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து நேற்று (5) புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது அமைப்புகளின் ஏற்பாட்டில்
பெரியோர்கள், இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள் என சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
" மல்வத்தை பூர்வீக தமிழ் கிராமத்தை அழிக்க திட்டமிட்ட சதி " மதுபானசாலையை அமைக்க நாம் இடம் தர மாட்டோம் உட்பட பல்வேறு வாசகங்கள் ஏந்திய பதாதைகளை சுமந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலை மல்வத்தை பிரதான வீதியிலுள்ள நாற்சந்தியில் பேரணியாக வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் இடம் பெறும் செய்தியை அறிந்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து வந்து கலந்து கொண்டதுடன், மக்களின் மகஜரையும் பெற்று கொண்டார்.
அத்தருணத்தில் சமுக செயற்பாட்டாளர்களான வெ.ஜெயச்சந்திரன், பொன்.நடராசன், துரையப்பா காத்தவராயன், து.கஜேந்திரன், தங்கவேல் கண்ணன், கே.சுரேஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் சேர்ந்து தயாரித்த மகஜரை அம்பாறை அரசாங்க அதிபர் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பொலீஸ் பொறுப்பதிகாரி மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் போன்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அழிக்க மதுபான சாலை வழிவகுக்கும்.
சில அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க முடியாத அரசியல்வாதிகள் மதுபான சாலையை அமைக்க திட்டமிட்டிருப்பது ஏனோ!எங்களை கூழோ கஞ்சியோ குடித்து நிம்மதியாக வாழ விடுங்கள்.
200 வருடகாலமாக மதுபானத்தினால் அழிந்தது போதும் இனியும் வேண்டாம் இந்த நிலை” என்றார்கள்.
மதுபான நிலையத்தை அமைத்துக்கொடுத்து எம்மிடமுள்ள எச்ச சொச்ச பொருளாதாரத்தையும் சீரழிக்க அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment