உத்தியோகபூர்வமாக கையளிக்கின்ற நிகழ்வு




 


பாறுக் ஷிஹான்


சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி பிரிவின் சமூக அபிவிருத்தி உதவியாளர் யு.எல்.ஜஃபரின் ஏற்பாட்டில் 2023  ஏப்ரல்  மாத சமுர்த்தி வீட்டு லொத்தர் சீட்டிழுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட சாய்ந்தமருது - 16 ஆம்  பிரிவைச் சேர்ந்த பயனாளியின் வீட்டின் குறை வேலைகள் திருத்தப்பட்டு உத்தியோகபூர்வமாக கையளிக்கின்ற  நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் இன்று (20) இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சி.எம்.நஜீம், சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ மஜீத், பிரிவுக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம். ஜாபிர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்திற் கே.ஆதம்பாவா, சமுர்த்தி சமூதாய அடிப்படை அமைப்பின் தலைவர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.