இன்று ஆசிரியர் கலாசாலை ஒன்று கூடலும் பணிநிறைவு பாராட்டு விழாவும்





 ( காரைதீவு சகா)

 மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை 91 /92 ஆம் ஆண்டு அணியின் மூன்றாவது ஒன்று கூடலும்  பணிநிறைவு பாராட்டு விழாவும் இன்று(8) சனிக்கிழமை மல்வத்தையில் நடைபெற இருக்கிறது.

அந்த அணியின் உறுப்பினர்களான மல்வத்தையைச் சேர்ந்த அதிபர் பொன் நடராஜன் ஆசிரியை திருமதி வசந்தினி நடராஜன் ஆகியோர் சேவையில் இருந்து ஓய்வு பெறுவதால் அவர்களுக்கான பணிநிறைவுபாராட்டு  பிரியாவிடை வைபவம் மல்வத்தையில் இடம் பெற இருக்கின்றது.

 இதற்கென்று அந்த புலன அணியை சேர்ந்த உறுப்பினர்கள் திருகோணமலை தொடக்கம் திருக்கோவில் வரையான பிரதேசங்களில் இருந்து வருகிறார்கள்.