வி.சுகிர்தகுமார் 0777113659
தேவார முதலிகளில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகளின் குருபூஜை தின நிகழ்வுகள் சிவசக்தி அறநெறிப்பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு ஆலையடிவேம்பு பிரதேச .இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் இன்று (29) இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச .இந்துமாமன்றத்தின் தலைவர் வே.சந்திரசேகரம் தலைமையில் இடம்பெற்ற குரு பூஜை வழிபாடுகளில் இமயமலை ரிஷிகேஸ் சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகராஜ் அருளாளராக கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாரகன் கௌரவ அதிதிகளாக ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கணேசன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தலைவர் அருள்ராஜா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜி ஓய்வு நிலை அதிபர் கனகரெத்தினம் சமூக செயற்பாட்டாளர் வாமதேவன் பிரதேச அபிவிருத்தி வங்கி உத்தியோகத்தர் சரவணன் பிரதேச கலாசார உத்தியோகத்தர் சர்மிளா பிரசாத் ஓய்வு நிலை விரிவுரையாளர் செல்வநாதன் பாடசாலை அதிபர் ஸ்ரீ மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக மகாகணபதி ஆலயத்தில் இடம்பெற்ற பூஜைகளை தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவுருவப்படத்தினை தாங்கிய பல்லக்கினை சுமந்து அறநெறி மாணவர்கள் ஊர்வலமாக அங்கிருந்து புறப்பட்டு சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரங்களை பாடிய வண்ணம் கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தை சென்றடைந்தனர்.
அங்கு இடம்பெற்ற பூஜைகளை தொடர்ந்து சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகராஜின் ஆசியுரை மற்றும் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
பின்னராக சுந்தரமூர்த்தி நாயனாரின் அற்புதங்கள் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பில் பலர் உரையாற்றினர்.
இதேநேரம் மாணவர்களின் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் அவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து சமூகத்திற்கு அரும்பணியாற்றிய பிரதேச செயலாளர் வி.பபாகரன் உள்ளிட்ட சமூக பெரியார்கள் மன்ற உறுப்பினர்கள் என பலர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் அறநெறிக்கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில் பேசியதுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறி தவிர்ந்த பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தும் 9ஆம் தரத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
இதேநேரம் இங்கு உரையாற்றிய மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வாழும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 850 அளவிலான மாணவர்களே அறநெறி பாடசாலைக்கு செல்வதாக குறிப்பிட்டார்.

Post a Comment
Post a Comment