பாறுக் ஷிஹான்
எம்.ஆர்.எம் றஜாய் எழுதிய காணிக்கு குருநாதன் எனும் நூல் வெளியீடும் கௌரவிப்பும் கிழக்கு மாகாண குடியேற்ற உத்தியோகத்தர் தொழிற்சங்கம் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை(9) மாலை 3.30 மணியளவில் கல்முனை கிருஸ்டா இல்ல மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது காணிக்கு குருநாதன் எனும் நூல் வெளியீட்டு நிகழ்வில் கதாநாயகன் முன்னாள் உதவி காணி ஆணையாளர் கே.குருநாதனை வாழ்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் பல்வேறு நிகழ்வுகளும் சிறப்பாக அரங்கேறின.
அம்பாறை மாவட்ட தலைமைப்பீட காணி உத்தியோகத்தர் கே.எம் முஸம்மில் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றதுடன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் கல்முனை ,சாய்ந்தமருது, நிந்தவூர், சம்மாந்துறை ,பொத்துவில், லகுகல, பிரதேச செயலாளர்கள், உட்பட கிழக்கு மாகாண பேரவை உதவி செயலாளர் எம்.சி அன்சார், முன்னாள் உதவி காணி ஆணையாளர் கே.குருநாதனின் உறவினர்கள், நண்பர்கள் ,என பலரும் கலந்து கொண்டு நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
Post a Comment
Post a Comment