அட்டாளைச்சேனையில் அண்மையில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்கள் இருவர், வியாழக்கிழமை அன்று அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் அச்சுவேலி சீர்திருத்தப் பாடசாலையில் எதிர்வரும் பத்தாம் திகதி வரை வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற கெளரவ நீதிபதி ஹம்சா அவர்கள் கட்டளை பிறப்பித்தார்.
குறித்த இந்த மாணவர்களின் தாக்குதலினால், காயமுற்றுப் பாதிப்புற்ற ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாக்குதல் தொடுத்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று அட்டாளைச்சேனையில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றிருந்தது.
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி இரு மாணவர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் ஆசிரியர் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதி
கடந்த (26) ந் திகதியன்று அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் கற்பிக்கும் T.கோகுலவாசன் Bsc ஆசிரியர் மீது அதே கல்லூரியில் உயர் தரம் கற்றும் இரு மாணவர்கள் , ஒரு மாணவரின் சகோதரர் மற்றும் மற்ற மாணவனின் பெற்றோர் ஆகியோரால் பாடசாலை முடிவடைந்த நேரத்தில் சரமாரியாக தாக்குதல் நடாத்தப்பட்டதில் ஆசிரியரின் கண்ணில் காயம் ஏற்பட்டதில் அவர் தற்போது அக்கரைப்பற்றில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த ஆசிரியரின் மணிக்கணனி மோட்டார் வண்டி மூக்குக்கண்ணாடி என்பன சேதமடைந்துள்ளது
பாடசாலையின் ஒழுக்க கோவையை செயல்படுத்துவதில் எற்பட்ட முரண்பாட்டில் இத்தாக்குல் நடை பெற்றதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் Akpnews க்கு தெரிவித்தார்
இது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒரு செயல்
தாக்குதல் நடத்தியவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும்
Post a Comment
Post a Comment