(வி.ரி. சகாதேவராஜா)
பட்டிருப்பு கல்வி வலயத்தால் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட வர்ண உடற்பயிற்சி போட்டியில்
திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலய அணி முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர்சிவானந் தம்-சிறீதரனின் ஆலோசனை வழிப்படுத்தலின்கீழ் ,உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் த.இதயகுமாரின் மேற்பார்வையில் கோவில் போரதீவு பொது விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் (20/07/2023) இப் போட்டி இடம்பெற்றது.
தரம் - 111 வகைப் பாடசாலைகளுக்கிடையில் இருநூற்று ஐம்பதுக்கு மேல் மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற இப் போட்டியில் மிக சிறப்பாக செயற்பட்ட திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலய அணி முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
வலயமட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி வலயக்கல்விப்பணிப்பாளரின் சிந்தனையில் உதித்த புதிய செயற்பாடாகும்.மாணவர்களை வெறும் புத்தகப் பூச்சிகளாக வைத்திருப்பதை மாற்றி உடல் உள தேகாரோக்கியம் மிக்க மாணவர்களைக் கட்டி எழுப்பும் நோக்குடன் முன்னேடுக்கப்படும் இச்செயற்பாடு பெற்றோர்கள் மத்தியில் பாராட்டப்படுகிறது.
முதலிடத்தைப் பெற்ற மேற்படி பாடசாலையின் அதிபர் கி.கிருஸ்ணராஜன், பயிற்றுவித்த ஆசிரியர்கள்,பங்குபற்றி திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள் ஒத்துழைத்த பெற்றோர்களை பாடசாலை சார், சாரா பொதுமக்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்
Post a Comment
Post a Comment