(சுகிர்தகுமார்)
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பனங்காட்டு பாலத்திற்கு அன்மையில் உள்ள பூர்த்தி செய்யப்படாத தனியார் கட்டடமொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலமொன்று அக்கரைப்பற்று பொலிசாரால் மீட்க்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்க்கப்பட்டவர் அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய கந்தசாமி அலக்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்டவரின் அண்ணனும் அவரும் கூலிக்கு மணல் ஏற்றும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் தாயுடன் ஏற்பட்ட சிறு மனவருத்தம் காரணமாக வீட்டை விட்டு இரு நாட்களுக்கு முன்னர் வெளியேறி அவரை வீட்டார் தேடிவந்த நிலையிலேயே இன்று சடலமாக மீட்க்கப்பட்டார்.
சடலமாக மீட்க்கப்பட்ட கட்டடத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகள் ஆகியோர் இன்று காலை கட்டடத்தை பார்வையிடுவதற்காக தற்செயலாக சென்று முன்கதவை திறந்துள்ளனர்.
இதன்போதே கதவின் ஓரமாக இருந்த கட்டடத்தின் அரைகுiறாக அமைந்துள்ள தூணின் கம்பியில் சாரணால் கழுத்தில் தூக்கிட்டு தொங்குவதை அவதானித்து பொலிசாருக்கு தகவலை தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் உயிரிழந்தவரின் பாதணிகளும் தூணின் மேற்பகுதியில் காணப்படுகின்றது.
இதன் பின்னராக குறித்த இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Post a Comment
Post a Comment