ஜனாஸா அடக்குமுறை சம்பந்தமான செயன்முறை




 


(நூருல் ஹுதா உமர்.)



சாய்ந்தமருது பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பின் ஏற்பாட்டிலும் மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீலங்காவின் அனுசரணையிலும் முஸ்லிம் வாலிபர் சங்கம் மாவடிப்பள்ளி கிளையின் ஒருங்கிணைப்பிலும் சாய்ந்தமருது சமுர்த்தி காரியாலய கேட்போர் கூடத்தில் ஜனாஸா அடக்குமுறை சம்பந்தமான செயன்முறை கருத்தரங்கு நடைபெற்றது.

பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் எம். ஐ. சம்சுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆஷிக் கலந்து சிறப்பித்ததோடு அதிதிகளாக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம். ரியாத் ஏ மஜீத், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் எ. சி. எ. நஜீம்,  சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ். ரிபாயா, (CBO) அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. எஃப். ஆர். சர்பின், மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் எஸ். ஏ. முஹம்மட் அஸ்லம், நிகழ்வின் வளவாளராக அஷ்ரப் மௌலவி, பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பின் செயலாளர் எம். முபீதா, பொருளாளர் ஏ. எம் பசீல், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யு. எல். ஜௌபர் மற்றும் HDA அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர். 


இதன் போது இஸ்லாமிய ஜனாஸா அடக்குமுறை சம்பந்தமான பல விடயங்கள் செயல்முறை மற்றும் கேள்வி பதில் ரீதியாக கலந்து கொண்ட பிரதிநிதிகளுக்கு விரிவுரை அளிக்கப்பட்டவை குறிப்பிடத்தக்க விடயமாகும்