நிகழ்வுகள்




 


பாறுக் ஷிஹான்


கடந்த 18 வருட காலமாக கல்முனை அலியார் வீதியில் இயங்கி வருகின்ற லீனத் பாலர் பாடசாலை சிறுவர் சிறுமியர்களின் பட்டமளிப்பு விழாவும், வருடாந்த நிகழ்வும் பாலர் பாடசாலையின் ஸ்தாபகரும் அதிபருமான எஸ்.தஸ்லி உம்மா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (09)   நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது பாலர்பாடசாலைச் சிறார்களின் சந்தைப் பொருட்கள் “சிறுவர் சந்தை” எனும் தொனிப்பொருளில் விற்பனைக்காக பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர்  மற்றும்  கௌரவ அதிதியாக கல்முனை அஸ்-ஸூஹாறா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியாவும்  கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள், பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர்மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.