எட்டாவது வருடமும் தங்கப்பதக்கத்தை சுவீகரித்த பாலுராஜ்




 


வி.ரி.சகாதேவராஜா)


கொழும்பு சுகததாசவில் கடந்த மூன்று தினங்கள் இடம்பெற்ற 47வது தேசிய விளையாட்டில் கராட்டி போட்டியில் கலந்து கொண்டு இம்முறையும் தங்கப்பதக்கத்தினை கல்முனையை அடுத்துள்ள சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ். பாலுராஜ் சுவீகரித்துள்ளார். 

 கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ள சேனைக்குடியிருப்பினை சேர்ந்த எஸ் பாலுராஜ் 
 2012 -முதல் (2020-2023)வரையில்   நடை பெற்ற தேசிய காராட்டி சுற்றுப்போட்டியில் தொடர்ச்சியாக தங்கப் பதக்கத்தை சுவீகரித்து வருகிறார்.

 இவ் வருடமும் தங்கப்பதக்கத்தினை பெற்று தொடர்ச்சியான முறையில் 8 வருடங்களாக பதக்கத்தினை தனதாக்கியதோடு  .  கராட்டி பிரிவில் தனது கிழக்கு மாகாணத்தின் பெயரை முதல் இடத்தில் தக்க வைத்துள்ளார். 

மூன்று தடவைகள் best player எனும் பட்டத்தினையும் சுவீகரித்துள்ளார்.