பெண் பொலிஸ் சார்ஜன்ட் கோவிலூர் விஜிதாவின் “புதுவரவு” நூல் வெளியீடு.
( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவரும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் கடமை புரியும் பொலிஸ் சார்ஜன்ட்டுமான கே.விஜிதாவின் “புதுவரவு ” எனும் சிறுவர் பாடல் நூல் வெளியீட்டு விழாவானது திருக்கோவில் கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது..
இந் நிகழ்வானது ஏ.எஸ்.கே.திருவதிகை கலைக்கூடத்தின் எற்பாட்டில் ஈழகவி .ஏ.கார்த்திகேசு தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் கலந்து சிறப்பித்தார்.
மேலும் கௌரவ அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவபீட பேராசிரியர் எஸ்.குணபாலன் மற்றும் விசேட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நூலின் முதல் பிரதியானது சுப்பிரமணியம் கிருஸ்ணமூர்த்தி (தந்தை) கீதாசாவித்திரி கிருஸ்ணமூர்த்தி (தாய்) ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வின் கோவிலூர் விஜிதா கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு விஜிதா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படும் நிகழ்வும் இடம்பெற்றது.
பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் ஆன்மீக உரையும் நிகழ்த்தப்பட்டதுடன் அதிதிகளினால் அதிதிஉரையும் நிகழ்த்தப்பட்டது.இறுதியில் கோவிலூர் விஜிதா நூல் ஏற்பு உரையை நிகழ்த்தினார்.
Post a Comment
Post a Comment