டெங்கு ஒழிப்பு சேவை அதிகாரிகளை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுங்கள்!




 


டெங்கு ஒழிப்பு சேவை அதிகாரிகளை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுங்கள். - நாபீர் பௌன்டேசன் தலைவர் UK நாபீர் கோரிக்கை.


டெங்கு ஒழிப்புக்கு  சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் 22,000 ரூபா உதவித்தொகையுடன்  பணிக்கமர்த்தப்பட்ட அரச ஊழியர்களை இதுவரையில் நிரந்தரமாக்கவில்லை எனவும் அவர்களை நிரந்தரமாக்க விரைவாக நடுவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இன்று (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாபீர் பௌன்டேசன் அமைப்பின் தலைவர் UK நாபீர் தெரிவித்தார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்,


எமது நாட்டில் டெங்கு ஒழிப்பு திட்டத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகளை மறந்து விடக்கூடாது. பணிக்கமர்த்தப்பட்ட அரச ஊழியர்களை 180 வேலைநாட்களுக்குள் நிரந்தரமாக்க வேண்டும்,  அவ்வாறிருந்தும் இவர்களை இதுவரையில் நிரந்தரமாக்கவில்லை இதனால் சுமார் 1100 அதிகாரிகள் வேலையை கைவிடும் நிலை காணப்படுகிறது.


இவர்களை சேவையில் நிரந்தரமாக்க சுகாதார அமைச்சல் விருப்பம் தெரிவித்த போதிலும் அது தொடர்பான அமைச்சவை பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்களது பொருளாதார நெருக்கடி, குடும்ப சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு அரசாங்கம் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  தெரிவித்தார்.