உள்ளூர் பெண் தலைமைத்துவத்தை வலுவூட்டுதல்





 நூருல் ஹுதா உமர்.


கனேடிய உதவியின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற "உள்ளூர் பெண் தலைமைத்துவத்தை வலுவூட்டுவதின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை நவீனமயமாக்கும் செயற்றிட்டம்" சேவை பகுப்பாய்வு கருவி தயார்படுத்துவதற்கு பொருத்தமான  பயிற்சிநெறி கோறளைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ். நவநீதன் தலைமையில் இன்று நடைபெற்றது.

உள்ளுராட்சி மன்றங்கள் சம்மேளன சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் பீ. பிரதீப் பயிற்சிநெறிக்கு நேரிப்படுத்தித்துனராக கலந்து கொண்டதுடன் உள்ளுராட்சி மன்றங்களின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம். வலீத், கோறளைப்பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி காரியலய பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகாத்தர்கள், சமூக பொதுநிறுவன நிர்வாகிகள் உட்பட்ட பலரும் கலந்து கொண்டனர்.