மஹா கும்பாபிஷேக நிகழ்வு




 


.கிரிசாந்-

கிழக்கு மாகாணம், ஆலையடிவேம்பு பிரதேச, வாச்சிக்குடா அருள் மிகு ஸ்ரீ ராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தான புணராவர்த்தன மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவநிகழ்வுகள் கருமாரம்பத்துடன் கடந்த புதன்கிழமை (05) ஆரம்பமாகியது.

அதனைத்தொடர்ந்து எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு (07) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிமுதல் கிரிகைகளுடன் ஆரம்பமாகி அடுத்த நாள் (08) ஆம் திகதி மாலை 04.00 மணிவரை இடம்பெற்றதுடன்.

இன்றைய தினம் (09/07/2023) ஞாயிற்றுக்கிழமையும் காலை 8.42மணிமுதல் 10.20 மணிவரையுள்ள சுப நேரத்தில் மஹா கும்பாபிஷேக நிகழ்வு நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் சூழ பக்திபூர்வமாக கோலாகலமாக இடம்பெற்றது.