கிராமசேவகர்,கைது செய்யப்பட்டுள்ளார்




 


கண்டி பிரதேசத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிகளை சேர்ப்பதற்காக போலி சான்றிதழை தயாரித்த குற்றச்சாட்டில் கிராமசேவகர் ஒருவர் கண்டி விசேட குற்றப்புலாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


வரெல்லகம பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய கிராம அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


தனது பெயரையும் கல்வி அமைச்சின் தலைப்பையும் பயன்படுத்தி போலியான ஆவணங்களையும் தயாரித்து வழங்கிய இவர் 29 பிள்ளைகளை பாடசாலையில் அனுமதித்துள்ளார்.