பறவைக்காவடியும், காவடி ஆட்டங்களும்




 .


சுகிர்தகுமார் 0777113659 

 அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று கோளாவில் 3 ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு  நேற்று (30) மாலை இடம்பெற்றது.

அம்பாரை மாநகரின் தென்பால் செந்நெல் விளையும் செழிப்பான வயல்வெளிகளையும் சைவநெறி பிறழாமல் நின்று சைவ சமயத்தையும் செந்தமிழையும் பேணிவரும் அக்கரைப்பற்று கோளாவில் பதியில் 'வம்மி' மரநிழலில் நித்திய பரிபூரண மூர்த்தியாக அடியவர்களின் தியானத்திற்குள் அகப்படல் வேண்டும் எனும் பெரும் நோக்கோடு குடியமர்ந்து அருள் வழங்கும் ஸ்ரீP முத்துமாரியம்மன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் சித்தர் ஆனைக்குட்டி சுவாமிகளின் காலால் 1945ஆம் ஆண்டு நிலையம் எடுத்து கொடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட சிறப்புமிகு ஆலயமாக திகழ்கின்றது.

இவ்வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் வழிபாடும் தொன்று தொட்டு இடம்பெற்றும் வருகின்றது.

இச்சிறப்பு மிகு ஆலயத்தின் கர்மாரம்ப கிரியைகள் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்றதுடன் 28 ஆம் திகதி இடம்பெற்ற கொடியேற்றம் 29 ஆம் திகதி இடம்பெற்ற அபிசேகம் ஆராதனை பிரார்த்தனையுடன் 30 ஆம் திகதி இடம்பெற்ற பாற்குட பவனியும் பறவைக்காவடியும் காவடி ஆட்டங்களுடனும் 01 ஆம் திகதி இடம்பெறும் அன்னதானம் மற்றும் மாலை இடம்பெறும் முத்துப்சப்பர கிராம உலாவும் 02ஆம் திகதி இடம்பெறும் திருக்காவியம் படித்தல் 03ஆம் திகதி காலை இடம்பெறும் திருக்குளிர்த்தி மாலை இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடன் 04 ஆம் இடம்பெறும் கடனாட்சி அம்மன் பூஜையுடன் இவ்வருட அலங்கார உற்சவம் நிறைவுறுகின்றது.

இவ்வருட அலங்கார உற்சவத்தை சிறப்பிக்கும் வகையில் நேர்கடன் அடியவர்கள் பலர் காவடி மற்றும் பறவைகாவடி எடுக்கும் வழிபாடுகளில் நேற்று ஈடுபட்டனர்.

ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான காவடி மற்றும் பறவைகாவடி எடுக்கும் நிகழ்வில் பல அடியவர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்தியை நிறைவேற்றினர்.

ஆலயத்தின் வரலாறு பற்றி நோக்குகையில் 1840-1850ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஆங்கிலேய ஆட்சி காலப்பகுதியில் மக்கள் வகைதொகையின்றி அம்மன் நோயினால் மடிந்ததாகவும் அவ்வாறு மடிந்தவர்களை ஆங்கிலேயர் ஒரே புதை குழியில் புதைத்தாகவும் ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வேளை அம்மன் பூசகரின் கனவில் தோன்றி கோதாரிக்கும்பம் வைத்து வழிபடவேண்டும் என கூறியதாகவும் அவ்வாறே செய்ய அம்மன் நோய் இல்லாதொழிந்து போனதாகவும் போனதாகவும் அவ்வழிபாடு இன்றும் இவ்வாலயத்தில் பின்பற்றப்படுவதும் குறிப்பிடத்தக்கதாவுள்ளது


போனதாகவும் போனதாகவும் அவ்வழிபாடு இன்றும் இவ்வாலயத்தில் பின்பற்றப்படுவதும் குறிப்பிடத்தக்கதாவுள்ளது.


; இதேநேரம் சித்தர் ஆனைக்குட்டி சுவாமிகளின் காலால் 1945ஆம் ஆண்டு நிலையம் எடுத்து கொடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட சிறப்புமிகு ஆலயமாகவும்  திகழ்கின்றது.

இவ்வாலயத்தின் திருவிழா ஆனித்திங்களில் இடம்பெறுவதும் திருவிழாவின் இறுதிநாள் ஏழு சிறுமிகளை அம்மனின் ஏழு வடிவங்களாக வைத்து பூஜை புனஸ்காரங்கள் செய்யப்படுவதும் இன்றும் நடைபெறுகின்றது. மேலும் ஐந்து சிறுவர்கள் வாய்கட்டி கும்பம் தூக்கி ஊர்வலம் வருவதும் இவ்வாலயத்திற்குரிய சிறப்பு வழிபாட்டு முறையாகும் என்பதுடன் பூஜைகள் யாவும் பத்தாதி முறையில் நடைபெறுவதும் சிறப்பம்சமாகும்.