.சுகிர்தகுமார் 0777113659
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் ஆனிப்பௌர்ணமி மகோற்சவத்தை முன்னிட்டதான திருவிளக்கு பூஜையும் வெளிவீதி உலாவும் நேற்றிரவு (30) இடம்பெற்றது.
சிவபூமி என அழைக்கப்படும் ஈழமணித்திருநாட்டின் தென்கிழக்கில் வரலாற்றுச் சிறப்புடன் இயற்கை எழில் நிறைந்த அக்கரைப்பற்று பதிதனில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் கர்மாரம்ப கிரியைகள் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமானது.
24ஆம் திகதி இடம்பெற்ற கொடியேற்றம் இம்மாதம் மாதம் 29ஆம் திகதிவரை இடம்பெறும் திருவிழாக்கள் நேற்றிரவு இடம்பெற்ற திருவிளக்கு பூஜையும் வெளிவீதி உலாவும் 02ஆம் திகதி இடம்பெறும் பாற்குடபவனி 03ஆம் திகதி இடம்பெறும் தீர்த்தோற்சவம் கொடியிறக்கத்துடனும் 04 ஆம் திகதி இடம்பெறும் திருப்பொன்னூஞ்சல்;; பூங்காவனத்திருவிழா, 05ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூசையுடனும்; நிறைவுறும்.
கொடித்தம்ப பூஜை இடம்பெற்றதுடன் திருவிளக்கு பூஜை இடம்பெற்று தொடர்ந்து ஆலயத்தில் மூலமூர்த்திக்கான பூஜை இடம்பெற்றதுடன் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் விநாயகப்பெருமானுக்கு விசேட அலங்கார பூஜை நடைபெற்றதன் பின்னர் எழுந்தருளிய விநாயகப்பெருமான் அடியார்களினால் உள்வீதி வலமாக அழைத்துச் செல்லப்பட்டு அழகிய சப்பரத்தில் அமர்த்தப்பட்டார்.
பின்பு நாதஸ்வர மேள ஒலி முழங்க அடியார்களின் பிரார்த்தனையுடன் வெளிவீதி உலா இடம்பெற்றது.
ஆலயத்தலைவர் வி.சுகிர்தகுமார் தலைமையில் இடம்பெற்ற மகோற்சவத்தின் வழிபாட்டுக்கிரியைகள் யாவற்றையும் அக்கரைப்பற்று பகுதி ஆதினகுரு இலி பழனிவேல் குருக்கள் ஆசியுடன் கிரியாகிரம ஜோதி அலங்கார பூசனம் சிவாகமபானு அகோர சிவாச்சாரியார் சிவஸ்ரீ சு.சுதர்சன் குருக்கள்; ஆலய குரு ப.கு.கேதீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வருகின்றனர்.

Post a Comment
Post a Comment