35 இலட்சம் ரூபா செலவில் புதிய மிம்பர் அமைக்கும் நடவடிக்கை
நூருல் ஹுதா உமர், ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் உள்ள பூர்வீக வரலாற்றை கொண்ட பள்ளிவாசல்களில் ஒன்றான மஸ்ஜிதுல் நூர் ஜும்மா பள்ளிவாசலில் புதிய மிம்பர் அமைக்கும் வேலை திட்டம் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவரும் கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.ஐ.எம்.முஹர்ரப் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாசலின் கட்டட நிர்மாண பணிகளை பூரணப்படுத்தும் வேலை திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே இந்த நவீன முறையிலான மர வேலைப்பாடுகள் நிறைந்த மிம்பர் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி உட்பட பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், கட்டட குழு தலைவர், செயலாளர் உட்பட அதன் உறுப்பினர்கள், வர்த்தக பிரமுகர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் என பலர் கலந்து கொண்டனர்.விளையாட்டு
Post a Comment
Post a Comment