சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் , கைது




 


பாறுக் ஷிஹான்


நீண்ட காலமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு இந்து மயானம் அருகில் உள்ள வெற்றுக்காணிகளில் தினமும் பணத்திற்காக சட்டவிரோதமாக ஒன்று கூடி  சூதாட்ட நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக  பொதுமக்களிடம் இருந்து பொலிஸாருக்கு தகவல்    கிடைக்கப்பெற்றிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய   சம்பவம்  தொடர்பில்  பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில்   
 பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து 28 சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை (9) மாலை  கைது செய்தனர்.

சட்டவிரோதமாக ஒன்று கூடி பல்வேறு  சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைதான அனைவரும் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர்   பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன்  எதிர்வரும்  12 ஆம் திகதி புதன்கிழமை   நீதிமன்றத்தில்  சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் பெரிய நீலாவணை பொலிஸார்  குற்றங்களை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.