108 டெங்கு நோயாளிகளும்,காப்பாற்றப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்





 (வி.ரி.சகாதேவராஜா)


கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த ஆறு மாதங்களில் அனுமதிக்கப்பட்ட 108 டெங்கு நோயாளிகளும் எவ்வித உயிரிழப்பு மின்றி காப்பாற்றப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

குறித்த வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா முரளீஸ்வரனின் சிறந்த நிருவாகத்தின் கீழ் நோயாளர்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வீடுகளுக்கு அனுபப்படுவதுஅனைவரும் அறிந்ததே. 

அந்த வகையில் கடந்த ஆறு மாத காலத்தில் வைத்தியசாலைக்கு வருகை தந்த பல்வேறு தொற்று நோயாளர்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

 டெங்கு நோயாளர்கள் (Dengue) 108 , எலிக்காய்ச்சல்  நோயாளர்கள் (leptospirosis) 04, வயிற்றுப்போக்கு நோயாளர்கள் (Dysentert) 10, மூளைக்காய்ச்சல் நோயாளர்கள் (Meningitis) 03, சின்னம்மை  நோயாளர்கள் (Measles)05, கொப்பளிப்பான் நோயாளர்கள் (Chicken pox) 13, காச நோய் நோயாளர்கள் (Tuberculosis) 15 பேருக்கும் சிறந்த முறையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.
 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எந்த ஒரு டெங்கு நோயாளர்களுக்கும் உயிராபத்துக்கள் ஏற்படாமல் பராமரிப்புகள் வழங்கப்பட்டு குணமடைந்து வீடு சென்றமை இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும் என்று தொற்று கட்டுப்பாட்டு பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.