குழு B யிலிருந்து இலங்கை, ஸ்கொட்லாந்து ,ஓமான் அணியும்,
( அய்ஷத்அப்ஸத்-பாலமுனை)
குழு B யிலிருந்து இலங்கை, ஸ்கொட்லாந்து ,ஓமான் அணியும்,
குழு A யிலிருந்து சிம்பாப்பே, நெதர்லாந்து, மேற்கிந்தியதீவுகள் ஆகிய அணிகள் super 6 போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
Super6 பட்டியலில் இலங்கை, சிம்பாப்பே அணிகள் 4 புள்ளிகளுடனும், ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து அணிகள் 2 புள்ளிகளுடனும், ஓமான், மேற்கிந்திய தீவு அணிகள் புள்ளிகளற்ற நிலையிலும், நிகர ஓட்ட வேக அடிப்படையிலும் நிரல்படுத்தப்பட்டுள்ளன.
#இது_எவ்வாறு?
குழு Bயிலிருந்து super 6 சுற்றுக்கு தெரிவான இலங்கை அணியானது, அதே குழுவிலிருந்து தெரிவான ஸ்கொட்லாந்து, ஓமான் அணிகளை முதல் சுற்றில் வெற்றிபெற்றுள்ளமையால் இலங்கை அணி இரு போட்டிகளில் வென்றுள்ளதாக கருதப்பட்டு super 6 சுற்றில் 4 புள்ளிகள் வழங்கப்பட்டு நிகர ஓட்டவேக அடிப்படையில் முதல் இடத்தில் பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கை super 6 சுற்றில் இனி குழு Aயிலிருந்து தெரிவான அணிகளுடனேயே போட்டியிட வேண்டும்(சிம்பாப்பே, நெதர்லாந்து, மேற்கிந்திய தீவுகள்)
இதே போன்றே குழு Aயிலிருந்து தெரிவான சிம்பாப்பே அதே குழுவிலிருந்து super6 சுற்றுக்கு தெரிவாகியுள்ள நெதர்லாந்து, மேற்கிந்திய தீவு அணிகளை வென்றுள்ளமையால் 4 புள்ளிகளுடன் நிகர ஓட்டவேக அடிப்படையில் இரண்டாம் இடத்தில் பட்டியல்படுத்தப்பட்டுள்ளது. சிம்பாப்பே அணியானது இனி Bகுழுவிலிருந்து தெரிவான 3அணிகளுடனேயே மோத வேண்டும்.
ஸ்கொட்லாந்து தனது குழுவிலிருந்து super6 தெரிவாகியுள்ள ஓமான் அணியையும்,நெதர்லாந்து அணி் முதல் சுற்றிலிருந்து தெரிவாகியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியையும் வென்றுள்ளமையால் ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு தலா இரு புள்ளிகள் வழங்கப்பட்டு முறையே 3,4 ஆம் இடங்களில் நிரல்படுத்தப்பட்டுள்ளன.
மேற்கிந்திய தீவுகள், ஓமான் அணிகள் தத்தமது குழுவிலிருந்து தெரிவாகியுள்ள இரு அணிகளிடமும் தோல்வியடைந்தமையால்,அவ்வணிகள் super6குழுவில் இரு போட்டிகளிலும் தோல்வியடைந்ததாக கருதப்பட்டு 0 புள்ளியுடன் நிகர ஓட்ட வேக அடிப்படையில் 5,6ஆம் இடங்கள் வழங்கப்பட்டுள்ளது..
இனி சுப்பர் 6 போட்டிகள் இவ்வாறு அமையும்
Bயிலிருந்து தெரிவான அணிகள் Aயிலிருந்து தெரிவான அணிகளுடனேயே மோதவுள்ளது.
அதாவது
இலங்கை, ஸ்கொட்லாந்து, ஓமான் அணிகள் மற்றய குழுவிலிருந்து தெரிவான சிம்பாப்பே,நெதர்லாந்து,மேற்கி ந்தியதீவுகள் அணிகளையே எதிர்த்தாடும்.
இனி, super 6 போட்டிகளின் பின் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் உலகக் கிண்ண போட்டிகளில் பங்குபற்ற தகுதி பெறும்.
Post a Comment
Post a Comment