உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா




 


இந்தியா வெற்றி பெற 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 2வது இன்னிங்சில் இந்தியா 234 ரன்களில் ஆல் அவுட்டானது. லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது. நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விராட் கோலி 49 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையும் படியுங்கள்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - ஒரே ஓவரில் அடுத்தடுத்து அவுட்டான விராட் கோலி, ஜடேஜா ஒரே ஓவரில் போலண்ட் இந்தியாவின் முக்கிய இரு வீரர்களை அவுட்டாக்கினார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது. அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரகானே 46 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷர்துல் தாக்குர் டக் அவுட்டானார். நிதானமாக ஆடிய ஸ்ரீகர் பரத் 23 ரன்னில் வெளியேறினார். உமேஷ் யாதவ் ஒரு ரன்னில் அவுட்டானார். இறுதியில் இந்தியா 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், போலண்ட் 3 விக்கெட்டும், ஸ்டார்க் விக்கெட்டும் வீழ்த்தினர்.