(நூருல் ஹுதா உமர்)
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக "புகைத்தலிலிருந்து மீண்டதோர் நாடு- மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் கிராமம்" என்ற தொனிப்பொருளில் மே மாதம் 31ஆம் திகதி தொடக்கம் யூன் மாதம் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியை புகைத்தல் மற்றும் போதைக்கு எதிரான காலமாக பிரகடனப்படுத்தி மக்களுக்கான விழிப்புணர்வும் கொடிவிற்பனை வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் ஒரு அங்கமாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் பிரதான நிகழ்வு சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமூக அபிவிருத்தி உதவியாளர் யு.எல்.ஜஃபரின் நெறிப்படுத்தலில் சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சி.எம். நஜீம் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
Post a Comment
Post a Comment