உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு




 


நூருல் ஹுதா உமர்  


வீட்டு லொத்தர் சீட்டுழுப்பின் மூலம் வழங்கப்பட்ட தலா ரூபா 2 இலட்சம் நிதியினை கொண்டு தனது வாழ்வாதாரத்தினை விருத்தி செய்வதற்காக சாய்ந்தமருது 01ஆம் பிரிவைச் சேர்ந்த பயனாளி ஒருவருக்கும் சாய்ந்தமருது 09 ஆம் பிரிவைச் சேர்ந்த பயனாளி ஒருவருக்கும் தொழில் முயற்சிகளை  ஆரம்பிக்கும் பொருட்டு அவர்களுக்கான உபகரணங்கள் வழங்குகின்ற நிகழ்வு  சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபரின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் (06) செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சி.எம். நஜீம், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர்  றியாத் ஏ. மஜீத், பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எம். ஜாபீர், எம்.ஐ. ஜெரீன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.