பழைய நானாவித பொருட்களின் பாரிய களஞ்சிய சாலையொன்யொன்றில் தீ





 வி.சுகிர்தகுமார் 0777113659 

 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அம்பாறை வீதியிலுள்ள பாவிக்கப்பட்ட பழைய இரும்புகள்; விற்பனை மற்றும் பழைய நானாவித பொருட்களின் பாரிய களஞ்சிய சாலையொன்று இன்று தீ  அனர்த்தத் துக்குள்ளாகியது.
இன்று காலை 10 மணியளவில் விற்பனை நிலையத்தில் இருந்து தீ வெளிவருவதை அவதானித்த அருகில் இருந்தவர்களும் கடையிலே வேலை பார்த்தவர்களும் உரிய தரப்;பினருக்கு அறிவித்திருந்த நிலையில் உடன் விரைந்து செயற்பட்ட தீயணைப்பு பிரிவினர் உள்ளிட்டவர்களினால் அதிஷ்டவசமாக தீ கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது.
அக்கரைபற்று மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், ஆலயடிவேம்பு அக்கரைப்பற்று, , அட்டாளைச்சேனை பிரேதேச சபைகளின் நீர் பவுசர்களின் உதவியைக்கொண்டு பரவிய தீ கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டதால் பாரிய அனர்த்தத்திலிருந்து தவிர்க்கப்பட்டது.
மாநகர சபையின் ஆணையாளர் எ.ரீ.எம் ராபி, அக்கரைப்பற்று 241 வது    இரானுவப்பிரிவின் கேர்ணல் தணிக்க பத்திரத்ன மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி ரீ.பீ.விஜயதுங்க போன்றோர் ஸ்தலத்தில் தமது குழுவினருடன் விரைந்து சென்று பாரிய கொழுந்துவிட்டெரிந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அயல்வீடுகளுக்கும் தீ பரவாமல் தடுத்தனர்.
பொது மக்களும் இப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் நீண்டகாலமாக  இயங்கிவரும் இந்தக் களஞ்சிய சாலையில் .பழைய பாவனைக்குதவாத இரும்பு மற்றும் நானாவித இரும்பு வகைகள் மின்சார உபகரணங்கள் கொள்வனவு செய்து மீள்சுழர்ச்சி பாவனைக்காக வேறு இடங்களுக்கும் அனுப்பி வந்தனர். ஆயினும் இச்செயற்பாடு பாதுகாப்பற்ற முறையில் இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது தொடர்பில் பிரதேச சபை கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
வெற்றுப்போத்தல்கள், மற்றும் சில மின் உபகரணங்கள் இவ்வனர்தத்தின்போது  வெடித்து சிதரறியதையும் காணக்கூடியதாக இருந்தது.
அனர்த்தம் ஏற்பட்டு சில மணிநேரம் அக்கரைப்பற்று அம்பாறை வீதி ஊடான போக்குவரத்து செயற்பாடுகளும் சற்று நேரம் தடைப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது .