நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் சாய்ந்தமருது பிரதேச செயலகம் நடத்திய களிகம்பு பயிற்சி பட்டறையும், அரங்கேற்றமும் இன்று (15) சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் எஸ். சுரேஷ் அவர்களின் ஒருங்கமைப்பில் இடம்பெற்றது.
இந்த களிகம்பு பயிற்சி பட்டறை மற்றும் அரங்கேற்ற நிகழ்வில் சாய்ந்தமருது மருதூர் தக்வா கோலாட்ட குழு, சாய்ந்தமருது முஹம்மதிய்யா கலைமன்றம், மாவடிப்பள்ளி வளர்பிறை கலை மன்றம் ஆகியவற்றின் மூத்த மற்றும் இளம் கலைஞர்கள் பங்குகொண்டு கோலாட்டத்தில் ஈடுபட்டதுடன் சிலம்பாட்டமும் செய்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிகா கலந்து கொண்டார். மேலும் சாய்ந்தமருது கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எச். சபீகா, சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரி யூ.கே. ரிம்ஸான், சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.நௌசாத், கலை விரிவுரையாளரும், சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய அபிவிருத்திக்குழு நிறைவேற்று சபை உறுப்பினருமான ஏ.ஐ. அமீர், சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய அபிவிருத்திக்குழு செயலாளர் அஸ்வான் எஸ் மௌலானா, அபிவிருத்திக்குழு பிரதி செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர் உட்பட சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய உறுப்பினர்கள், கலைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment