( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற கிழக்கிலங்கை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயவருடாந்த வைகாசித் திங்கள் திருக்குளிர்ச்சி சடங்கின் பகல் இரவுப்பூசை நிகழ்வுகள்
தற்போது இடம் பெற்று வருகின்றன.
நேற்று (31) புதன்கிழமை இரவு உடுக்கை முழங்க ஊர் சுற்றுக் காவியம் பாடப்பட்டது.
பறை மேளம் குழல் ஒலிக்க, கப்புகன்மார் முன்னிலையில், உடுக்கை ஒலியுடன் பக்தர்களின் அரோஹரா கோஷம் குரவை ஒலிக்கு மத்தியில், ஊர்சுற்றுக்காவியம் பாடல் ஆரம்பமாகியது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுகள் அனைத்தும் பண்டைய கலாசார பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment