மின் இணைப்பு வசதிகளை வழங்கல்.




 


(சர்ஜுன் லாபீர்)


கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு பகுதியில் மின்சார இணைப்பு இன்றி மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு அசெளகரியங்களை மேற்கொண்டு வந்தனர்.

இது விடயமாக பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் என்பன விடுத்த வேண்டுகோளை ஏற்று "Real Champion 2k03"(பாடசாலையில் கல்வி கற்று 2003ம் வருடம்  O/L பரீட்சை எழுதிய) மாணவர்கள் மேற்படி மின் இணைப்பு வசதிகளைச் செய்வதற்குறிய சும்மார் 0.75 மில்லியன் நிதி உதவியினை வழங்கி வைத்தனர்.

மேற்படி நிதியுதவிக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைசால் தலைமையில் இன்று(10) பாடசாலையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஏ அஸ்தர் உட்பட 2003ம் ஆண்டு க.பொ.த( சா/த) மாணவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இப் பாடசாலையின் அபிவிருத்திக்கு கடந்த காலங்களில் மேற்படி 2003ம் ஆண்டு வகுப்பு மாணவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.