அதிதிகளின்றி இடம்பெற்ற யோகா விழிப்புணர்வு நிகழ்வு!




 


(வி.ரி. சகாதேவராஜா)


 இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் அம்பாறை மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடத்தும் சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்வு நேற்று(21) புதன்கிழமை காலை  காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நடைபெற்றது.

 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்நிகழ்விற்கு புத்த சாசன மத விவகார கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கௌரவ அதிதியாகவும் கலந்துகொள்ள இருந்தனராயினும் இறுதி வரை அவர்கள் வருகைதரவில்லை.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.என். டக்ளஸ் பிரதானியாக கலந்து சிறப்பித்தார்.