யூனானி வைத்தியர்கள்,போராட்டம்




 


பாறுக் ஷிஹான்


வைத்திய நியமனத்தில் யூனானி வைத்தியர்களாகிய தாங்கள்  புறக்கணிப்பட்டுள்ளதாக தெரிவித்து  போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டமானது யூனானி வைத்தியர்கள் இன்று ஒன்று கூடி மஹரகம நாவின்ன பகுதியில் அமைந்துள்ள ஆயுள்வேத திணைக்களத்தின் முன்னெடுத்தனர்.

இப்போராட்டத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் ஆயுர்வேத வைத்தியர்களை நியமனம் செய்யும் போது ஆயுர்வேதஇ சித்த மற்றும் யூனானி வைத்தியர்களை உள்ளடக்கி நியமனம் வழங்கப்படுவது வழக்கமானதொன்றாக இருந்து வந்தது எனவும் ஆனால்  தற்போது இந்த நடைமுறை  மீறப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினர்.மேலும் 100 க்கும் மேற்பட்ட ஆயுர்வேத வைத்தியர்களுக்கு மட்டும் நியமனம்  தற்போது வழங்குவதானது யூனானி வைத்தியர்களாகிய எமக்கு  இழைக்கப்படும் அநீதியாகும் என  குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனங்களின் போதுஇ ஒரே முறையில் 7 ஆயுர்வேத வைத்தியர்களும் இரு யூனானி வைத்தியர்களும் ஒரு சித்த வைத்தியரும் உள்வாங்கப்பட்டு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன.

ஆனால்இ இன்றைய தினம் வழங்கப்பட இருக்கின்ற ஆயுர்வேத வைத்தியர்களுக்கான நியமனங்களில் யூனானி வைத்தியர்கள் உள்ளீர்க்கப்படாமையானது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதுடன் இது யூனானி வைத்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என தான் கருதுவதாகவும்  குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டினர்.

மேற்படி ஆயுர்வேத வைத்தியர்களின் நியமனத்தில் யூனானி வைத்தியர்களாகிய தாங்கள்  புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய தரப்பினர்  கவனம்  செலுத்துமாறும் பாதிக்கப்பட்டுள்ள யூனானி வைத்தியர்கள் கொரிக்கைகளை முன்வைத்து பல்வேறு சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.

இது தவிர  மேற்படி நியமனத்தில் யூனானி வைத்தியர்களையும் இணைத்துக்கொள்வதற்கு தேவையான பணிப்புரையினை உரிய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டுமெனவும்  யூனானி வைத்தியர்களாகிய எமக்கு  தற்போது  இழைக்கப்பட்டிருக்கின்ற அநீதி தொடர்பில்  உரிய தரப்பினர் தீர்வொன்றினை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.